"ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவி".. மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை..!
சேலம் மாவட்டத்தில் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறி பணி புரியும்போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டது.
இந்த கருவியை தலை கவசத்திலோ அல்லது கையிலோ அணிந்து கொண்டு மின்கம்பத்தில் ஏறும்போது மின்சாரம் பாய்ந்தால் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மின்சாரத்துறை ஊழியர்கள் 450 பேருக்கு இந்த கருவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பணியில் இருக்கும்போது கருவியை அணியாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மரவனேரி அலுவலக மின் மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி தெரிவித்தார்.
Comments